மறுபடியும் ஊத சொல்றாங்க: கொரோனா பரவ விடுறாங்க!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:33

போத்தனூர்:மது போதையில் வாகனங்களை ஓட்டி வருவோரை சோதிக்க, ப்ரீத்திங் அனலைஸர் எனும் கருவியை போலீசார் பயன்படுத்துகின்றனர். இதில், 0--18 வரையான அளவு போதையில் நிதானமாக இருப்பதை குறிக்கும். இதற்கு மேல் போதை அளவு இருந்தால், வாகனத்தை கையாளும் நபர் நிதானமாக இல்லை என கருதப்படும்.கடந்தாண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, இக்கருவியை பயன்படுத்தும் முறை கைவிடப்பட்டது. ஏனெனில், கருவியின் ஸ்டிக்கில் (ஊதுகுழல்) பிடிபட்ட அனைவரும் ஊதுவர். தொற்று பரவும் அபாயம் அதிகளவு இருந்தது.கடந்த ஓராண்டாக கைவிடப்பட்டிருந்த இம்முறை, சில நாட்களாக மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ.,கள் ஒவ்வொருவரும், தினமும் ஒருவரையாவது பிடிக்க வேண்டும் என, உயரதிகாரியால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, மிக வீரியமாக பரவி, ஓரளவு குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. மூன்றாம் அலை துவங்கிவிடும் எனும் நிலையில், இப்பரிசோதனை முறை மிகவும் அபாயமானதாகும்.ஏனெனில் இக்கருவியை கையாளும் போலீசார், கையுறை, மாஸ்க் அணிருந்திருந்தாலும், சமூக இடைவெளியை கடைபிடிப்பது சாத்தியமில்லை. தொற்று பரவலை தவிர்க்க முடியாது. உயரதிகாரிகள் சிந்திப்பார்களா?

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X