வெள்ளையும் சொள்ளையுமாக... தடுப்பூசிபோடுமிடத்தில் இவர்களுக்கு என்ன வேலையோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:34

பெ.நா.பாளையம்;தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பெண்கள், ஒரு விஷயத்தை வெளியே சொல்ல முடியாமல் நெளிகின்றனர். அது...தடுப்பூசி போடுமிடத்தில் ஆடை விலகுவதை வேடிக்கை பார்க்க, 'அலையும்' அரசியல்வாதிகள் சிலரை பற்றிய குற்றச்சாட்டு. பெண்கள் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளும் அறையில் ஆண்கள் நுழைவதையோ, போட்டோ எடுப்பதையோ தடை செய்ய வேண்டும் என, குரல் எழுப்பி வருகின்றனர்.நாடு முழுவதும் பரவி வரும் கோவிட் தொற்றை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.கடந்த மார்ச் மாதம் முதல், பொதுமக்களில் முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.பெரும்பாலான தடுப்பூசி செலுத்தும் பகுதிகளில், குறிப்பாக, பெண்கள் தடுப்பூசி செலுத்தும் அறைகளில், ஆண்களின் நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், பெண்கள் தடுப்பூசி செலுத்தும் அறைக்குள் நுழைந்து, போட்டோ எடுக்கிறோம் என்ற போர்வையில், வக்கிர பார்வையுடன் உடலை வெறிக்கின்றனர்.பல பெண்கள் தயங்கி, தயங்கி கூச்சத்துடன், தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இன்னும் சிலர், 'அரசியல்வாதிகளை வெளியே செல்லும் படி கூறினால், தனக்கு தடுப்பூசி போட மறுத்து விடுவார்களோ' என்ற அச்சத்தில், தயக்கத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்'. மக்களின் பயத்தை பயன்படுத்தி, வெள்ளையும் சொள்ளையுமாக 'ஜொள்ளர்கள்' உலா வருகின்றனர்.நகர்ப்புற பகுதிகளில் பெண்கள், 'ஸ்லீவ்லெஸ்' ஜாக்கெட் அல்லது சுடிதார் அணிந்து, இந்த பிரச்னையை சமாளிக்கின்றனர். இதில் சிக்குவது, சேலை அணிந்த கிராமத்து பெண்கள்தான்.இது குறித்து, வெள்ளமடை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பிருந்தா அன்புசெல்வன், ரேவதி சதாசிவம் ஆகியோர் கூறுகையில், 'நம் பெண்கள் பெரும்பாலும், இறுக்கமாக ஜாக்கெட் அணியும் பழக்கம் உடையவர்கள். தடுப்பு ஊசி போடுகையில், ஒரு பக்கத்தை விலக்கி, கைகளில் தடுப்பூசி போட வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலையில், போட்டோ எடுக்கிறேன் என கூறி, சிலர் உள்ளே நுழைந்து, பெண்களின் மானத்தை வெளிஉலகுக்கு காட்டுகிறார்கள்.அனைத்து தடுப்பூசி மையங்களிலும், பெண்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும். அந்த அறையில், டாக்டர், செவிலியர் தவிர, யாரையும் அனுமதிக்கக்கூடாது. பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடலாம்.எந்த அரசியல் தலையீடும், தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் இருக்கக் கூடாது. பெண்கள் தடுப்பூசி போடும் அறையில், கண்டிப்பாக போட்டோ எடுக்கக் கூடாது. மீறி எடுப்பவர்கள் போலீசில் ஒப்படைக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு, தடுப்பூசி மையங்களில் வைக்கப்பட வேண்டும்.பெண்களுக்கு தடுப்பூசிகளை பெண் மருத்துவர்கள், செவிலியர் மட்டுமே போட வேண்டும். இது குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அனுப்பியுள்ளோம்' என்றனர்.இவ்விஷயத்தில், ஆளுங்கட்சி தரப்பினர் மீதுதான், குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. ஆமாம்...தடுப்பூசி செலுத்தும் இடத்தில், டாக்டர் இருக்கலாம்; நர்ஸ் இருக்கலாம். அரசியல்வாதிகளுக்கு என்ன வேலை? கவனிப்பாரா கலெக்டர்?

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X