குண்டு குழந்தைகள் மீது கூடுதல் கவனம்! பெற்றோருக்கு டாக்டர் 'அட்வைஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 ஆக
2021
06:51
பதிவு செய்த நாள்
ஆக 01,2021 01:38

'உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். குண்டாக இருந்த குழந்தைகள், மேலும் குண்டாகி உள்ளனர்.



அதனால் இவர்களுக்கு, நோய் எதிர்ப்பு மிக குறைவாக இருக்கும்,'' என்கிறார் ஆரிய வைத்திய பார்மஸியின் மருத்துவர் விஜயபிரியா.கொரோனா மூன்றாவது அலை வந்தால், குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என, மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.



இந்த சூழ்நிலையில், பருமனான குழந்தைகளை கவனித்துக் கொள்வதில், நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்கிறார், ஆரிய வைத்திய சாலை ஆயுர்வேத மருத்துவர் விஜயபிரியா.அவர் கூறியதாவது:குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். அதனால் நோய் பாதிக்காது என, செல்வது பொதுவான கருத்தாகும். ஊர் முழுவதும் நோய் தொற்று பரவி இருக்கும் போது, குழந்தைகளை பாதிக்காது என்று சொல்வது சரியல்ல.



மூன்று மாதங்களுக்கு கவனம்!



சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள், பெரியவர்களை விட, குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கிறது. இந்த சூழ்நிலையில், குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது மழைக்காலம். இன்னும் மூன்று மாதங்களுக்கு, குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, உடல் பருமனாக இருக்கும் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால், ஏற்கனவே குண்டாக இருந்த குழந்தைகள், மேலும் குண்டாகி உள்ளனர்.நோய் எதிர்ப்பு சக்தி குறைவுஅதனால் இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மிக குறைவாக இருக்கும். சுவாச பிரச்னை உள்ள குழந்தைகளை, மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெறுவது அவசியம். உணவு கட்டுப்பாட்டுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, குழந்தைகளுக்கு தேவை. வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலை ஆகியவற்றை கொதிக்க வைத்து, கசாயம் தயாரித்து தேனில் கலந்து, குழந்தைகளுக்கு உணவுக்கு பிறகு கொடுக்கலாம்.கபசுர குடிநீர் வேண்டாம். ஜீரக தண்ணீர் நல்லது. சுடு தண்ணீர் குடிப்பது, சுடு தண்ணீரில் குளிப்பது, நேரத்துக்கு உணவு சாப்பிடுவது, துாங்குவது போன்றவை எப்போதும் நல்லது. பெரியவர்கள் வெளியில் செல்லும் போது, குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம். இவ்வாறு, அவர் கூறினார்.



உணவு கட்டுப்பாட்டுடன் யோகா, மூச்சுப்பயிற்சி, குழந்தைகளுக்கு தேவை. வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இலை ஆகியவற்றை கொதிக்க வைத்து, கசாயம் தயாரித்து தேனில் கலந்து, குழந்தைகளுக்கு உணவுக்கு பிறகு கொடுக்கலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X