வீடுகளுக்குள் நுழைந்த 'கடப்பாரை' திருடர்கள் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வீடுகளுக்குள் நுழைந்த 'கடப்பாரை' திருடர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:39

மதுக்கரை:மதுக்கரை மார்க்கெட்டிலிருந்து போடிபாளையம் செல்லும் வழியில் பிரபல நிதி நிறுவனத்தினர் கட்டி வரும் குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. மொத்தம், 154 வீடுகள், இதில், 60 வீடுகள் முற்றிலும் பணி நிறைவடைந்துள்ளது. 30 வீடுகளில் குடித்தனம் உள்ளனர்.நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணியளவில் கடப்பாரைகளுடன் வந்த மூவர், காவலாளி கேபினுக்கு அருகேயுள்ள வீட்டின் பின் கதவு தாழை உடைத்து, உள்ளே நுழைந்து திருடியுள்ளனர்.தொடர்ந்து ரித்தீஷ் என்பவரின் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சுமார், 30 ஆயிரம் ரூபாயுடன் இருந்த உண்டியலை திருடினர்.மேலும் ரவீந்திரன் உள்பட, ஆறு பேரின் வீடுகளில் புகுந்த ரொக்கத்தை மட்டும் திருடியுள்ளனர். வெங்கட் என்பவரின் வீட்டிலிருந்த பழங்களை சாப்பிட்டுள்ளனர்.அதிகாலை, 5:00 மணியளவில் அங்கு வசிக்கும் தனியார் கல்லூரி பேராசிரியர் வெளியே வந்துள்ளார். திருடர்களில் ஒருவரை பார்த்தவர், காவலாளியை மொபைல் போன் மூலம் அழைத்துள்ளார்.காவலாளி பேசாததால், அருகேயுள்ள வீட்டில் வசிப்பவருக்கு தகவலை தெரிவித்து சென்றுள்ளார். வீடுகளில் வசிப்போர் வெளியே வந்து பார்த்தபோது, திருடர்கள் தப்பிவிட்டது தெரிந்தது.தகவலறிந்த மதுக்கரை போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தி, சிசி டிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். தடயவியல் பிரிவினர் கைரேகை பதிவுகளை சேகரித்தனர், தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.குடியிருப்புவாசி ஒருவர் கூறியதாவது:சுமார் ஒன்றரை மணி நேரம் திருடர்கள் இங்கு உலாவியுள்ளனர். எப்போதும் ஆறு காவலாளிகள் இருப்பர். சம்பவத்தன்று நான்கு பேர் மட்டுமே இருந்தனர். சிசிடிவி கேமரா நான்கு மட்டுமே உள்ளது. மொத்தம் எட்டு வீடுகளில் புகுந்துள்ளனர். நான்கு வீட்டு உரிமையாளர்கள் வந்த பிறகே திருட்டு போன பொருட்களின் முழு விபரம் தெரிய வரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X