விட்டாச்சு லீவு அறிவிப்பு... பெண் போலீசாருக்கு பரிசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
01:40

போலீசாருக்கு வார விடுமுறை அளிப்பதுடன், திருமணம், பிறந்த நாளிலும் விடுமுறை வழங்க வேண்டும்என, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.கோவையில் பெரியய்யா கமிஷனராக இருந்த போது போலீசாருக்கு பிறந்த நாள், திருமண நாட்களுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிட்டார். அதன் பின் தற்போதுள்ள கமிஷனர், தீபக் தாமோர், வார விடுமுறை வழங்கி உத்தரவிட்டார்.இதற்கு போலீசார் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இந்நிலையில், டி.ஜி.பி., சைலேந்திரபாபுவின் அறிவிப்பு, போலீசார் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மீனாட்சி, தலைமைக்காவலர்

ஏற்கனவே எங்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து போலீசாருக்கும் விடுமுறை வழங்கப்பட்டது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு இன்னல்களுக்கு நடுவே, பணிபுரியும் இவ்வுத்தரவு வரவேற்கக்கூடியது.மோகன், தலைமைக்காவலர்

இது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு உத்தரவு. வாரத்தில் ஆறு நாட்கள் உழைத்திருக்கும் எங்களுக்கு, வார விடுமுறை இல்லாமல் பணிபுரிந்த போது, மனஉளைச்சல் இருந்தது. அதைப் போக்கும் விதமாக இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி., யின் உத்தரவு வரவேற்கப்படக்கூடிய ஒன்று.நீலமேகம், தலைமைக்காவலர்

மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. போலீசாரின் நீண்ட நாள் கனவு இது. ஒரு நாள் விடுமுறை என்பது வரப்பிரசாதம். மிகவும் சிக்கலாக பணிபுரிந்து வரும் நிலையில், விடுமுறை அளித்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.ஜாய்ஸ், தலைமைக்காவலர்

கோவையில் கமிஷனராக இருந்த போது, டி.ஜி.பி., கவுன்சிலிங் நடத்தி, பணியிட மாறுதல் வழங்கினார். பல்வேறு பிரச்னைகளில் இருந்த போலீசாருக்கு, அது மிகப்பெரும் ஆறுதலாக இருந்தது. அதேபோல் தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பெண் போலீசான எங்களுக்கு, இது ஒரு மிகப்பெரிய பரிசு. குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X