டி.என்.பி.எல்.,லில் முறைகேடு பொது மேலாளர் 'சஸ்பெண்ட்' | கரூர் செய்திகள் | Dinamalar
டி.என்.பி.எல்.,லில் முறைகேடு பொது மேலாளர் 'சஸ்பெண்ட்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:04

கரூர்: கரூர் டி.என்.பி.எல்., ஆலையில், நிலக்கரி கொள்முதலில் முறைகேடு நடந்தாக எழுந்த குற்றச்சாட்டில் முதன்மை பொது மேலாளர் உட்பட இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், தமிழ்நாடு செய்தித்தாள் காகித உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் காகிதம் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.


இந்த ஆலைக்கு தேவைப்படும் நிலக்கரி, வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக, தரமற்ற நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும், அதில், கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதையடுத்து ஆலையின் முதன்மை பொதுமேலாளர் பாலசுப்பிரமணியம், தரக்கட்டுப்பாடு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாலசுப்பிரமணியம் நேற்று பணி ஓய்வு பெறும் நிலையில், நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X