கோவை மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:08

கோவை:தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 9ம்தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.அதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்றிரவு ஆலோசனை கூட்டம் நடந்தது.


இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பலவேறு வர்த்தக சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழக அரசால் ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், ஆக., 2ம் தேதி முதல் கோவை மாவட்டத்திற்கு கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.


அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10:00 முதல் மாலை 5:00 வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம், 5,6 மற்றும் 7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும், ஞாயிற்றுகிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது.


மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை அமர்ந்து, 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.மாவட்டத்திலுள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. சில்லறை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இவற்றை கண்காணிக்க வேண்டும்.


கேரள - தமிழ்நாடு எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனை சாவடிகள் வழியாக, கோவை மாவட்டத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கோவிட் பாதிப்பு இல்லை என்பதற்கான 'ஆர்டிபிசிஆர்' பரிசோதனை சான்று மற்றும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X