மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சேவை: முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

01 ஆக
2021
06:46
பதிவு செய்த நாள்
ஆக 01,2021 02:14

சென்னை;'''மக்கள் பயன்பெறும் வகையில், அரசு சேவைகள் அமைய வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.



தலைமை செயலகத்தில், மனித வள மேலாண்மை துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், முதல்வர் கூறியதாவது:அரசு அலுவலர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் அளிப்பதன் வாயிலாக, அவர்கள் பணித்திறனை மேம்படுத்த வேண்டும். அதன் வழியே, மக்கள் பயன்பெறும் வகையில், சேவைகளின் தரத்தை உயர்த்த வேண்டும்.



போட்டி தேர்வுகளில், நம் மாநில மாணவர்கள், அதிக அளவு தேர்ச்சி பெறும் வகையில், பல்வேறு வகைப்பட்ட சிறப்பு பயிற்சிகளை வடிவமைத்து, அரசு பயிற்சி நிலையங்கள் வழியே வழங்க வேண்டும்.தமிழக மாணவர்கள் இடையே, மாநில மற்றும் மத்திய அரசு பணிகள் தொடர்பான, போட்டித் தேர்வுகள், அதற்கான தகுதிகள், தேவையான பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்த வேண்டும்.குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பகங்கள் வழியே, அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்கவும், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து துறைகளிடமும் இணையதளம் வழியே, தகவல் பெறும் வசதிகளை மேம்படுத்த வேண்டும்.அரசு அலுவலர்களின், மனிதவள ஆற்றலை மேம்படுத்தவும், தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பை பெருக்கவும், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்டமைப்புகளை உயர்த்த வேண்டும்.



பவானிசாகரில் உள்ள, அடிப்படை பயிற்சி மையத்தால், அரசு பணியாளர்களுக்கான பயிற்சியை, 'வீடியோ கான்பரன்ஸ்' மற்றும் இணைய வழி பயிற்சியாக அறிமுகப்படுத்தலாம்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.கூட்டத்தில், அமைச்சர் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு, மனிதவள மேலாண்மைத் துறை செயலர் மைதிலிராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
01-ஆக-202108:27:27 IST Report Abuse
RajanRajan அண்ணா, இந்த அரசு நிர்வாகத்திலே எந்த அரசு சேவை லஞ்சம் கொடுக்காமல் மக்கள் பயனடையலாம் என ஒரு பட்டியலிட்டு காட்டுங்களேன் பார்க்கலாமே. இங்கே தன் CRADLE TO GRAVEYARD வரைக்கும் லஞ்சம் கொடுக்கல்லேன்னா ஒரு வேலையும் ஆவாதே. என்னே ஒரு திராவிட புரட்சி வாசகமடோ இது. ஜோக் பண்ணுறாங்களோ. அரசு வாசல்படி முதல் மருத்துவமனை வாசல் வரை ஒருவன் சென்றால் திவாலாகாமல் வெளியே வர முடியாதே. அப்பட்டி ஒரு கட்டுக்கோப்பு அல்லவா அரங்கேறி கொண்டிருக்கிறது அறிவாலய சுடரே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X