'பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுங்க!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:15

புதுச்சேரி:''தமிழகம், புதுச்சேரியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளை கண்டறிய வேண்டும்,'' என, இந்து முன்னணி தமிழ்நாடு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.புதுச்சேரியில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் இந்து கோவில்களை மட்டும் இடிக்கின்றனர்.வேறு எந்த சட்ட விரோத வழிபாட்டு தலங்களையும் இடிப்பதில்லை. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கின்றது.தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான, ஆறு லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை காணவில்லை என்று அறிக்கை சொல்கிறது.இந்த இடங்களை பல்வேறு அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்துள்ளனர். இவர்கள் எந்த அரசியல் கட்சியினராக இருந்தாலும், அக்கட்சியின் பெயரை வெளியிட வேண்டும். கொரோனாவை காரணம் காட்டி, சிறிய கோவில்களுக்கு திருவிழா நடத்த அனுமதிக்கப்படாமல் உள்ளது. சிறிய கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.புதுச்சேரி மற்றும் தமிழகத்தில், வங்கதேசத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் ஊடுருவி உள்ளனர். வங்க தேசத்தில் குற்றங்களை செய்து விட்டு, இங்கு சட்டவிரோதமாக ஒளிந்துள்ளனர்.இது, தமிழகம், புதுச்சேரியில் பயங்கரவாத செயலுக்கு வித்திடும். எனவே, இரு மாநில அரசுகளும் தீவிர சோதனை நடத்தி, அவர்களை கண்டறிந்து தடுக்க வேண்டும்.இந்தாண்டு தமிழகத்தில், விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.தமிழகத்தில் 1.15 லட்சம் இடங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில், 500 இடங்களிலும் விநாயகர் சிலையை வைக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் உடனிருந்தார்.முன்னதாக, தமிழ்நாடு - புதுச்சேரி இந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம், புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.இந்து முன்னணி தமிழ்நாடு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். புதுச்சேரி கோட்ட ஆர்.எஸ்.எஸ்., தலைவர் செல்வராஜ் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.கூட்டத்தில், 'தமிழக இளைஞர்கள் மனதில் பிரிவினையை துாண்டவே ஒன்றிய அரசு கோஷம் எழுப்பப் படுகிறது. இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என்பது உட்பட, சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X