ஜனாதிபதி வருகை 7,000 போலீஸ் பாதுகாப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
ஜனாதிபதி வருகை 7,000 போலீஸ் பாதுகாப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:16

சென்னை:நாளை ஜனாதிபதி வருகையை ஒட்டி, 7,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், டில்லியில் இருந்து விமானம் வாயிலாக, நாளை பகல், 12:45 மணியளவில், சென்னை விமான நிலையம் வருகிறார்.அங்கிருந்து கிண்டி ராஜ்பவனுக்கு செல்லும் அவர், அதன்பின், சட்டசபை நுாற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.இந்நிலையில், 2ம் தேதி முதல், 3ம் தேதி காலை வரை, சென்னையில் ஜனாதிபதி இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. குறிப்பாக, ஜனாதிபதி செல்லும் வழிதடங்களில், 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்க, சில மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X