ஆபாச பேச்சு வீடியோ: குவியுது புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:18

'பப்ஜி' விளையாட்டில் ஆபாசமாக பேசி, 'வீடியோ' வெளியிட்டதற்காக, பப்ஜி மதனை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.ஆனால், அதை விட ஆபாசமாக பேசியும், உடை அணிந்தும் தொடர்ச்சியாக, வீடியோ வெளியிடுபவர்களை, ஏன் கைது செய்ய வில்லை எனக்கேட்டு, டி.ஜி.பி.,க்கு புகார்கள் குவிகின்றன.



இது குறித்து, தென் சென்னை மாவட்ட காங்., செயலரும், ஒருங்கிணைந்த மகளிர் கூட்டமைப்பு தலைவியுமான புனிதவள்ளி கூறியதாவது:'யு டியூப் சேனல்' வழியாக, பலரும் தங்களுக்கு விருப்பப்பட்டதை வீடியோவாக்கி, பதிவேற்றம் செய்து வருகின்றனர்.அதேநேரம், ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசி நடிக்கும் பலரும், அதை வீடியோவாக்கி, யு டியூப் சேனலில் வெளியிட்டு வருகின்றனர்.



குறிப்பாக, ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, திருச்சி இலக்கியா, ஜி.பி.முத்து உள்ளிட்டோர் பதிவிடும் வீடியோக்கள், மிகவும் மோசமாக உள்ளன.தற்போது, கொரோனா காலகட்டம். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், 'ஆன்லைன்' வாயிலாக படிக்கின்றனர்.


அதற்காக, இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அத்துடன், யு டியூப் சேனல்களையும் பார்க்கின்றனர்.அப்போது, ஆபாச பேச்சு வீடியோக்களும் காட்சிக்கு வருகின்றன. அவற்றையும் பார்க்கும் எதிர்கால சமூகம் கெட்டு, குட்டிச்சுவர் ஆகி விடும்.எனவே, ஆபாச பேச்சு வீடியோக்களை, யு டியூப் சேனலில் இருந்து எடுக்க வேண்டும். இனி, அவர்கள் பதிவிட முடியாதபடி செய்ய வேண்டும்.



கூடவே, இப்படி மோசமாக வீடியோ வெளியிடுபவர்கள் மீது, போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பிரச்னை குறித்த புகாரை , டி.ஜி.பி., அலுவலகத்தில் கொடுத்தோம். உடனே நடவடிக்கை எடுப்பதாக கூறினர்; இதுவரை எடுக்கவில்லை. எனவே, போராட்டம் நடத்துவது குறித்து யோசித்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.'விசாரணை நடத்தப்படும்''பப்ஜி' மதன் மீது புகார்கள் வரிசையாக வந்தன. அதன்பின் விசாரித்து, அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


திருச்சி சாதனா, இலக்கியா, ஜி.பி.முத்து, ரவுடி பேபி சூர்யா ஆகியோர் பதிவிடும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். அவர்கள் மீதான புகார்களுக்கு வலுசேர்க்கும் ஆவணங்கள், 'சைபர் கிரைம்' போலீசால் சேகரிக்கப்படுகின்றன. விரைவில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக, அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அப்போது கூட, அவர்கள் தவறை உணர்ந்தால், அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் போகலாம்.சைபர் க்ரைம் பிரிவு போலீஸ் அதிகாரி.'போலீஸ் என்ன செஞ்சிரும்?'நான் எங்கும் ஆபாசமாக பேசவில்லை. அப்படி எதுவும் பதிவு போட்டிருந்தால், அதை அனுப்புங்கள்; பார்க்கிறேன். என் பதிவு பிடிக்கவில்லை என்றால், பார்க்காமல் இருந்து விட வேண்டியது தானே.


அதை பார்த்து விட்டு, எதற்கு ஆபாசமாக இருக்கிறது என, சொல்ல வேண்டும்; போலீசில் எதற்காக புகார் கொடுக்க வேண்டும்; அப்படியே கொடுத்தாலும் போலீஸ், இதில் என்ன நடவடிக்கை எடுத்து விட முடியும்?இலக்கியா, 'யு டியூப் சேனல்' வீடியோ பதிவாளர். - நமது நிருபர் --

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X