திறன்கள் வளர்ப்பின் அவசியம் 'வழிகாட்டி 2.0' நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
திறன்கள் வளர்ப்பின் அவசியம் 'வழிகாட்டி 2.0' நிகழ்ச்சியில் நிபுணர்கள் விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:37

'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், இரண்டாம் கட்ட, 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சி நேற்று துவங்கியது.இதில், 'கோர் இன்ஜினியரிங்' படிப்புகள் என்றால் என்ன; என்னென்ன பிரிவுகள் இதில் அடங்கும்; கோர் இன்ஜினியரிங் பிரிவுகளில் உள்ள ஏராளமான வேலை வாய்ப்புகள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி முதல்வர் ரமேஷ் விரிவாக பேசினார்.தொடர்ந்து பேசிய நிபுணர் முகமது யூசுப், திறன்களின் வகைகள், அவற்றின் முக்கியத்துவம், தற்போதைய சூழலில், தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்கள் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தார். 'கிஷ்புளோ' நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி சுரேஷ் சம்பந்தம், படிக்கும்போதே வளர்த்துக் கொள்ள வேண்டிய தொழில் முனைவோர் திறன்கள், தொழில் துவங்குவதற்கான முதலீட்டை பெறும் முறை, தமிழக மாணவர்களுக்கு உள்ள பிரகாசமான வாய்ப்புகள் குறித்து, விரிவாக பேசினார்.இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, 'கட்-ஆப்' குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, கல்லூரியை தேர்வு செய்யும் முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி தலைவர் ஸ்ரீராம், நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து, 'ஒர்க்போர்ஸ் மேனேஜ்மெண்ட்' இயக்குனர் சுப்ரமணி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.இந்நிகழ்ச்சி, 'தினமலர்' மற்றும் 'கல்வி மலர்' இணையதளங்களில் நேரலையில் ஒளிபரப்பாகிறது. இரண்டாம் கட்ட, 'தினமலர் வழிகாட்டி' நிகழ்ச்சி, இன்றுடன் நிறைவுபெறுகிறது.கேள்வி கேட்கலாம்!காலை, 10:௦௦ முதல், 12:௦௦ மணி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இலவசமாக பங்கேற்கலாம். kalvimalar.com இணையதளத்தில் மாணவர்களின் பெயர், வகுப்பு மற்றும் மொபைல் எண் ஆகிய தகவல்களை அளித்து, பதிவு செய்து கொள்ளலாம்.இணையதளம் வாயிலாகவே நிபுணர்களிடம், மாணவர்கள் தங்களது சந்தேகங்களை பதிவு செய்யலாம். அவற்றிற்கு நிபுணர்கள் நேரலையில் பதில் அளிப்பர். மேலும், நேற்றைய நிகழ்ச்சியில், கல்வியாளர்கள் பேசிய வீடியோக்களை, 'கல்விமலர்' இணையதளத்தில் பார்த்து பயன் பெறலாம். - நமது நிருபர் -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X