குறு, சிறு நிறுவனத்துக்கு கடன் கொடுக்கும் ஸ்டார்ட் அப் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
குறு, சிறு நிறுவனத்துக்கு கடன் கொடுக்கும் ஸ்டார்ட் அப்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:38

இந்தாண்டில், 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனிக்கான, 'யூனிகார்ன்' என்ற சிறப்பை, 18 நிறுவனங்கள் அடைந்துள்ளன. அதில் ஒன்று 'ஆப் பிசினஸ்' என்ற நிறுவனம். இந்தியாவில், இன்டஸ்டிரியல் புராடக்ட் சப்ளை துறையின் இன்றைய மதிப்பு 3.50 லட்சம் கோடி ரூபாய். இந்த துறை ஆண்டுக்கு 20 சதவீதம் வளர்ந்து வருகிறது. 2025ம் ஆண்டில் இந்த துறையின் மதிப்பு 7 லட்சம் கோடி ரூபாய் அளவில் இருக்கும்.எம்.எஸ்.எம்.இ., கம்பெனிகள் பழங்கால முறையில் பொருட்களை வாங்குவதால் தளர்ந்து விடுகின்றன. பல இடங்களுக்கு அலைந்து பல பொருட்களை பார்த்து வாங்குவது என்பது தற்காலத்தில் முடியாத ஒரு செயலாகி இருக்கிறது. 'இ' கொள்முதல் இதற்கெல்லாம் ஒரு வடிகாலாக இருக்கிறது. எல்லா சப்ளைகளையும் ஒருங்கிணைத்து வந்திருக்கும் பி2பி ஆன்லைன் கம்பெனியில் ஒன்று தான், ஆப் பிசினஸ்.என்னென்ன பொருள்... இந்த கம்பெனி ஸ்டீல், டி.எம்.டி., பார்கள், பாலிமர், சிமென்ட், விவசாய பொருட்கள், பேப்ரிகேஷன், பெட்ரோலிய பொருட்கள், கெமிக்கல்ஸ், நான்-பெர்ரோஸ், சோலார், டெக்ஸ்டைல்ஸ், லெதர் ஆகிய துறைகளில் உள்ள மூலப்பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்துகிறது. தற்போது 5,000 வாடிக்கையாளர்களுடன், 2,000 விற்பனையாளர்களுடனும் கூட்டு வைத்துள்ளனர். 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்துள்ளனர்.கடன் வசதிகள்நிறுவன நடைமுறை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு ரூ.2 கோடி வரை இந்த நிறுவனம் கடன் வழங்குகிறது. இதற்காக பல வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வழியில், வாங்கிய கடன்களுக்கு பயன்படுத்திய தொகைக்கு மட்டுமே வட்டி செலுத்த வேண்டும். இந்த கடன் தொகையை வைத்து மூலப்பொருட்கள், இயந்திரங்கள் போன்றவற்றை 'இ' -கொள்முதல் செய்ய பயன்படுத்தலாம்.சேமிப்புக்கு உதவும்பொருட்களின் தேவைக்கு சந்தையில், 100க்கும் அதிகமான சப்ளையர்களிடமிருந்து விலை பெறுவதால் சிறந்த பொருள் குறைந்த விலைக்கு எங்கு கிடைக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இது எம்.எஸ்.எம்.இ, நிறுவனங்களின் பண சேமிப்புக்கு மிகவும் உதவுகிறது.இணையதளம் www.ofbusiness.comசந்தேகங்களுக்கு: இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன்: 98204-51259, இணையதளம்: www.startupandbusinessnews.com - சேதுராமன் சாத்தப்பன் -

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X