வால்பாறையில் விபத்து தவிர்க்க 'டிஜிட்டல்' அறிவிப்பு பலகை | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
வால்பாறையில் விபத்து தவிர்க்க 'டிஜிட்டல்' அறிவிப்பு பலகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
02:40

ஆனைமலை:வால்பாறை கொண்டை ஊசி வளைவில் வாகனம் வருவதை தெரிவிக்க டிஜிட்டல் அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டம் ஆழியாறில் இருந்து வால்பாறை வரை ஆபத்தான, 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வளைவில் எதிரே வாகனங்கள் வருவதை தெரிவிக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சூரிய மின் சக்தியில் இயங்கும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் சிவராஜ் கூறுகையில், ''சோலார் வசதியுடன் கூடிய இந்தப்பலகையில், எதிரே வாகனம் வந்தால் தமிழிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பு வெளியாகும். வளைவில் கீழ் பகுதி மற்றும் மேல் பகுதியில் தலா நான்கு சென்சார் வைக்கப்பட்டுள்ளது. சென்சாரை வாகனங்கள் கடந்ததும் அறிவிப்பு வெளியாகும். இதனால், கீழே இருந்து மேலே ஏறும் வாகனங்களுக்கு வாகன ஓட்டுனர்கள் வழி விடுவதுடன், விபத்துகளும் குறையும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X