பட்டா நகல் பெறுவதற்கான புதிய இணையதள சேவை நாளை துவக்கம் | செய்திகள் | Dinamalar
பட்டா நகல் பெறுவதற்கான புதிய இணையதள சேவை நாளை துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
05:59

புதுச்சேரி : நிலவரி திட்ட நகல், பட்டா நகல் பெறுவதற்கான புதிய இணையதள சேவை, நாளை (2ம் தேதி) துவக்கப் படுகிறது.



புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 129 வருவாய் கிராமங்களின் நிலவரி திட்ட பதிவேடுகள், நில அளவை மற்றும் பதிவேடுகள் இயக்ககம் மூலம், கணினி மயமாக்கப்பட்டுள்ளன.இதை, www.nilamagal.py.gov.in என்ற இணைய தளம் மூலம் பொது மக்கள் எந்நேரத்திலும் பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும், டிஜிட்டல் கையொப்பமிட்ட நில வரி திட்ட நகல், பட்டா நகல், புலப்படம் போன்றவற்றை இணையதளம் மூலம் ரூ. 50 கட்டணம் செலுத்தி பெறலாம்.இந்த சேவையின் துவக்க விழா, நாளை (2ம் தேதி) காலை 11:00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி பங்கேற்கின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X