'கற்போம், எழுதுவோம்' தேர்வு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
'கற்போம், எழுதுவோம்' தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
05:59

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 'கற்போம், எழுதுவோம்' அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான வினாத்தாள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.



திருக்கோவிலுார் ஒன்றியத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு இல்லாத 1,122 பேருக்கு 'கற்போம், எழுதுவோம்' திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வுக்கான வினாத்தாள்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வட்டார கல்வி அலுவலர் முரளி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் வரவேற்றார். வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் முன்னிலை வகித்தார்.



மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, தேர்வு நடத்துவதற்கான ஆலோசனை வழங்கினார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X