ரேஷன் கடைகளை திறக்க அமைச்சர் கலந்தாய்வு | செய்திகள் | Dinamalar
ரேஷன் கடைகளை திறக்க அமைச்சர் கலந்தாய்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
05:59

புதுச்சேரி, : ரேஷன் கடை மூலம் அரிசி வழங்குவது தொடர்பாக, துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.



ரேஷன்கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவது நிறுத்தப்பட்டு, குடும்பத் தலைவரின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.கொரோனா கால நிவாரணமாக மத்திய அரசு வழங்கும் அரிசியை, பள்ளி ஆசிரியர்களை கொண்டு வழங்கப்பட்டது. இதனால், ரேஷன் கடைக்காரர்கள் வேலை இழந்துள்ளனர்.இந்நிலையில், தற்போதைய அரசு, மீண்டும் ரேஷன் கடை மூலம் அரிசி வழங்கிட நடவடிக்கை எடுத்து வருகிறது.



இதுதொடர்பாக நேற்று முன்தினம், சட்டசபையில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைமைச் செயலர்அஸ்வனிகுமார் உள்ளிட்டஅதிகாரிகள் கலந்து கொண்டனர்.ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்குவது, பாசிக் நிர்வாகத்தை சீரமைத்து ஊழியர்களை பணி அமர்த்துவது, குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X