சீரமைப்பு பணிகள் அமைச்சரிடம் கோரிக்கை | செய்திகள் | Dinamalar
சீரமைப்பு பணிகள் அமைச்சரிடம் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:01

புதுச்சேரி : வில்லியனூர் தொகுதி யில் பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், சட்டசபையில் அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடத்தது.



அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். எதிர்க் கட்சித் தலைவர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனூஸ், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்|டனர்.எதிர்க்கட்சித் தலைவர் சிவா, வில்லியனுார் தொகுதியில் பழுதான ஹைமாஸ் விளக்குகளை சரி செய்தல், கழிவுநீர் வாய்க்கால்களை துார் வாருதல், சுத்தமான குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.இதையடுத்து, அப்பணிகளை விரைந்து செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X