விழுப்புரத்தில் பாரம்பரிய நெல், காய்கறி விதை கண்காட்சி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
விழுப்புரத்தில் பாரம்பரிய நெல், காய்கறி விதை கண்காட்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:03

விழுப்புரம் : விழுப்புரத்தில், பாரம்பரிய விதை திருவிழா மற்றும் பாரம்பரிய நெல், காய்கறி, விதைகள் கண்காட்சி நடந்தது.



பசுமை இயற்கை விவசாய இயக்கம் தமிழ்நாடு, புதுச்சேரி சார்பில் விழுப்புரம் ஜெயசக்தி மண்டபத்தில் நேற்று துவங்கிய கண்காட்சியில், பாரம்பரிய நெல் கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருங்குறுவை, நவரா, பூங்கார் உட்பட 452 நெல் வகைகள், அரைக்கீரை, சிறுகீரை உட்பட பல்வேறு கீரை வகைகள் மட்டுமின்றி, அவரை, பாகற்காய் உட்பட 450 வகைகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.கண்காட்சியில் பங்கேற்போருக்கு பாரம்பரிய அரிசியில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது.



இது மட்டுமின்றி கீரை, காய்கறி வகைகள், நெல் விதை வகைகள் விற்பனைக்கும் உள்ளது. இன்றும் 1ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை இயக்க ஒருங்கிணைப்பாளர் பாண்டியன் செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X