அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே வருவாய்த் துறை அதிகாரிகளை மிரட்டிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனுார் அடுத்த கோட்டப்பூண்டி கிராமத்தில், அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்தினர் 34 சென்ட் தரிசு நிலத்தை ஆக்கிரமித்து கொட்டகை அமைத்திருந்தனர். புகார் குறித்து விசாரணைக்குச் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகளை ஆபாசமாக திட்டி, அரசு பணி செய்ய விடாமல் மிரட்டியுள்ளனர்.வி.ஏ.ஓ., சரவணன் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் மனைவி ஜெயலட்சுமி, 52; மகன்கள் ராமநாதன், 29; குமாரசாமி, 35; ஆகிய 3 பேர் மீது அவலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து குமாரசாமியை கைது செய்தனர்.