விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் 43 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 341 பேர் இறந்தனர். 412 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 851 ஆக உயர்ந்தது. இதுவரை 43 ஆயிரத்து 98 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.