சிறு, குறு விவசாயிகள் சான்று | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
சிறு, குறு விவசாயிகள் சான்று
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:16

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் சான்றுக்கான சிறப்பு முகாம் நடந்தது.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரதமர் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய முறையில் சொட்டுநீர் பாசனம் அமைக்க, நடப்பாண்டிற்கான சிறு, குறு விவசாயிகள் சான்று வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி மற்றும் இந்திலி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. முகாமிற்கு, தாசில்தார் பிரபாகரன் தலைமை தாங்கினார். மண்டல துணை தாசில்தார் சேகர் முன்னிலை வகித்தார்.



கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., (பொறுப்பு) சரவணன் முகாமினை துவக்கி வைத்தார்.முகாமில், வேளாண்மை மற்றும் கரும்பு அலுவலர்கள் உள்ளிட்ட உரிய அலுவலர்கள் மூலம் விவசாயிகள் அளித்த விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலினை செய்யப்பட்டு, தகுதி உள்ளவர்களுக்கு சிறு, குறு விவசாய சான்றுகள் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X