சின்னசேலம் : குட்கா, புகையிலை போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக் கூடாது என வணிகர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் போலீசார் தெரிவித்தனர்.
சின்னசேலம் அடுத்த கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமை தாங்கினார். கூட்டத்தில், குட்கா, புகையிலை, பான்பராக் போன்ற போதை தரும் பொருட்களை கடைகளில் விற்பனை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் போதை பொருட்களை பயன்படுத்த துவங்கியுள்ளதால், அவர்களின் வாழ்க்கை திசை மாறுகிறது.பொதுமக்களின் நலன் கருதி, வணிகர்கள் குட்கா, புகையிலை போன்ற பொருட்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.விற்பனை செய்பவர்களின் விபரம் தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.