சின்னசேலம் : மாவுப்பூச்சி தாக்குதலில் இருந்து மரவள்ளி பயிரை பாதுகாப்பது குறித்து சின்னசேலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்தியராஜ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:சின்னசேலம் வட்டாரத்தில் 1,100 எக்டேர் பரப்பளவிற்கு மரவள்ளி பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக சின்னசேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மரவள்ளி பயிர்களில் மாவுப்பூச்சி மற்றும் செம்பேன் தாக்குதல் காணப்படுகிறது.பூச்சித் தாக்குதல் ஆரம்ப நிலையில் இருக்கும் போது ஒரு லிட்டர் தண்ணீரில் அசாடிராக்டின் 1,500 பி.பி.எம்., மருந்தினை 500 மி.லி., கலந்து தெளித்து விட வேண்டும்.
பாதிப்பு அதிகமாக இருப்பின், சுழற்சி முறையில் ஒரு லிட்டர் தண்ணீரில் ப்ளோனிகாமிட் 50 டபிள்யூஜி 0.3 கிராம் அல்லது தையோமித்தாக்சைம் 25 டபிள்யூசி-100 கிராம் அல்லது ஸ்பைரோட்ராமெட் 150 ஓடி 1.5 மி.லி., மேலும் செம்பேன் இருப்பின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அபாமெக்டின் 2.5 மி.லி., அல்லது ஸ்பீரோமேசிபின் 1.5 மி.லி., கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் பயிரின் அடிப்பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இதனோடு ஒட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.