ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 சவரன் நகை கொள்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:20

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டப் பகலில், ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



விழுப்புரம் அடுத்த பூத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42; அப்பகுதியில் ஓட்டல் கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவியுடன் நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டை பூட்டிக் கொண்டு, ஓட்டலுக்கு சென்றார்.மதியம் 12:00 மணிக்கு மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே மர அலமாரியில் இருந்த 15 சவரன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

பின், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X