கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி பகுதிகளில் மின்மாற்றி திறன் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் வரும் 8ம் தேதி வரை அவ்வப்போது மின்தடை ஏற்படும் என செயற் பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மின்மாற்றி திறன் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால், வரும் 8ம் தேதி வரை அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட உள்ளது.இதனால் கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்படும். தவிர்க்க முடியாத மின் தடைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்து உதவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.