புவனகிரி : புவனகிரி அடுத்த வடதலைகுளத்தில் இயற்கை வேளாண்மையின் சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.முகாமிற்கு வட்டார தொழில்நுட்ப மேலாளர் கல்பனா வரவேற்றார். வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன், இயற்கை சாகுபடிக்கான இடுபொருள்களின் முக்கியத்துவம் குறித்து பேசியதுடன் இயற்கை உரம் தாயாரிப்பு குறித்து விளக்கமளித்தார்.செந்தமிழ் மரபு வேளாண் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன், அமைப்பாளர் முருகன் பேசினர். முகாமில் சுற்று பகுதி விவசாயிகள் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.