நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் பா.ஜ.,மகளிரணி மற்றும் சேவா பாரதி அமைப்பு சார்பில் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த பெண்களுக்கு நிவாரண பொருட்களை சேவாபாரதி நகர செயலாளர் அம்சா பாஸ்கரன் வழங்கினார். பா.ஜ.,மகளிரணி நிலவழகி, சுகுணா, உமா மகேஸ்வரி, சேவாபாரதி தலைவர் ராஜலட்சுமி, அபிராமசுந்தரி, கனகராஜ், கஜேந்திரன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.கொரோனா முற்றிலும் வராமலிருக்க கூட்டு தியானம் செய்தனர். நெல்லிக்குப்பத்தில் செயல்படாமல் உள்ள பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நெல்லிக்குப்பத்தில் இருந்து வான்பாக்கம் வழியாக மயிலம், கும்பகோணம், திருச்சி, சென்னை பஸ்களை இயக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.