ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய முகவரி குளறுபடி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:34

உளுந்துார்பேட்டை : நீதிமன்ற பணியாளர்களுக்கான தேர்வில், ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய முகவரி குளறுபடியால் தேர்வர்கள் அலைக் கழிக்கப்பட்டனர்.



தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர்கள், நகல் எழுத்தர்கள், சுகாதார ஊழியர்கள், இரவு காவலர்கள், துப்புரவாளர்கள், வாட்ச்மேன்கள் உட்பட 16 பிரிவுகளுக்கான 3,557 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இதில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள 144 காலி பணியிடங்களுக்கு ஏராளமானோர் விண்ணப் பித்திருந்தனர். இவர்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.இரு மாவட்ட தேர்வர் களுக்கும் விழுப்புரம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டது.



ஆனால், விண்ணப்பதாரர்கள் பலருக்கு ஹால் டிக்கெட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி, ஏ.குமாரமங்கலம் அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளி என குறிப்பிடப்பட்டு இருந்தது.அதன்பேரில் தேர்வர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9:00 மணி முதல் உளுந்துார்பேட்டை மற்றும் ஏ.குமாரமங்கலம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வரத் துவங்கினர்.ஆனால், அங்கு தேர்வு நடைபெறுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், தேர்வர்கள் குழப்பம் அடைந்தனர்.இதுகுறித்து அறிந்த உளுந்துார்பேட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ஏ.குமாரமங்கலம் பள்ளிக்குச் சென்று, தேர்வு எழுத வந்த தேர்வர்களை 6 அரசு பஸ், தனியார் பள்ளி, கல்லுாரி பஸ்களில் ஏற்றி, விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதேபோன்று, உளுந்துார்பேட்டை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பஸ்களில் ஏற்றி விழுப்புரத்திற்கு அனுப்பி வைத்தனர்.இத்தேர்வு காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை ஒரு மணி நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.ஆனால் ஏ.குமாரமங்கலத்தில் இருந்து சென்ற 200 தேர்வர்கள் நேற்று காலை 11:40 மணிக்கு விழுப்புரம் சென்றடைந்தனர். அவர்களுக்கு மட்டும் 11:50 முதல் 12:50 மணி வரை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.ஹால் டிக்கெட்டில் தேர்வு மைய முகவரி குளறுபடியால் தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X