நீதித்துறை அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு | கடலூர் செய்திகள் | Dinamalar
நீதித்துறை அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:46

கடலுார், : கடலுாரில் நடந்த நீதித்துறை அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.



சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நீதித்துறை அலுவலக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இத்தேர்வு கடலுாரில் உள்ள அரசு, தனியார் பள்ளி- கல்லுாரிகள் என 7 மையங்களில் நடந்தது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இன்று சுகாதார பணியாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X