விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டம்: இடம் கையகப்படுத்தும் பணி தீவிரம் விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டம்இடம் கையகப்படுத்தும் பணி தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
06:53

விழுப்புரம் : விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு, இடம் கையகப்படுத்தும், பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



விழுப்புரம்- நாகப்பட்டினம் 194 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலை (45ஏ) உள்ளது. இச்சாலையில் செல்லும் வாகனங்கள் விழுப்புரம், வளவனுார், கண்டமங்கலம், புதுச்சேரி, அரியாங்குப்பம், கடலுார், ஆலப்பாக்கம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால் வழியாகநாகப்பட்டினம் செல்கிறது.விழுப்புரம் - நாகை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற 2012ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த நான்கு வழிச்சாலை திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங்கள், கடலுார் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகை மாவட்டத்தில் 43 கிராமங்கள் என மொத்தம் 134 கிராமங்கள் வழியாக கடக்கிறது.



இத்திட்டத்தில், நான்கு வழிச்சாலை அமைக்க 45 மீட்டர் அகலத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி 2018ம் ஆண்டு துவங்கியது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே ஜானகிபுரம் கூட்ரோட்டில் இருந்து நாகப்பட்டினம் புறவழிச்சாலை துவங்குகிறது. இச்சாலை திட்டத்திற்கு, மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த நிதி மூலம் சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதையடுத்து, நிலம் கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.



பின்னர், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மாநில எல்லை வரை 29 கி.மீ., துாரத்திற்கு 45 மீட்டர் அகலம் அளவீடு செய்து, முதல் கட்டமாக 2019 ஜனவரி மாதம் சீரமைக்கும் பணி துவங்கியது. அப்போது, இப்பணிகள் நான்கு ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி, டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் 2019 ஜூன் மாதம் மனு தாக்கல் செய்தார்.அதில், சீர்காழி முதல் நாகப்பட்டினம் வரை 5,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் பணி துவங்கியது. மக்களிடம் கருத்து கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி பெறாமலும் 25 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது.



இதையடுத்து, இத்திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், நான்கு வழிச்சாலை பணிக்கான, இடைக்கால தடையை ரத்து செய்து, 2020 ஜனவரி மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் முதல் இச்சாலை பணிக்கு இடம் கையகப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்துவங்கினர்.இதையடுத்து, விழுப்புரம் அருகேஜானகிபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை முதல் கட்டமாக இடம் கையகப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதால், அளவீடு செய்து விவசாய நிலங்களில் இருந்த பயிர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X