இனிக்கும் இலங்கை தமிழில் ஷாலினி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
13:25

விண்மீன்களில் செதுக்கிய கூர்வாள் விழிகள்... கார் முகில்களில் செய்த கருங்கூந்தல் அருவிகள்... இதழ்களின் இனிப்பில் இனிக்கும் இலங்கை தமிழ், பேரழகால் மயக்கும் இவள் மாடல் மயில், ஆடும் பரதங்களில் பிறக்கும் பாவனைகள், இயற்கை நிறத்தோடு தோற்கும் ஒப்பனைகள்... என மாடல், ஊடக உலகில் கலக்கும் இலங்கை ஷாலினி மனம் திறக்கிறார்...நான் பரதநாட்டிய கலைஞர்... நிகழ்ச்சி தொகுப்பில் ஆர்வம் இருந்ததால் சென்னை வந்து யூடியூப் தளத்தில் தொகுப்பாளராக இருந்தேன். நடன வாய்ப்புகள் வந்ததால் மீண்டும் இலங்கை சென்றேன். தற்போது இலங்கை அரசின் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன்.பொழுது போக்கு நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் குறித்து தொகுத்து வழங்கி வருகிறேன். இதோடு பின்னணி குரல் கலைஞராகவும் பயணித்து கொண்டிருக்கிறேன்.என் தமிழ் உச்சரிப்பு, பேச்சு தெளிவை பலர் பாராட்டியுள்ளனர். மாடலிங் துறையில் ஆசை வந்ததால் பாரம்பரிய ஆடைகளை மட்டும் அணிந்து மாடலிங் செய்கிறேன். இங்குள்ள அழகு நிலையங்கள், ஆடையகங்களுக்கு மாடல் போட்டோ ஷூட் கொடுக்கிறேன். நடிக்க வாய்ப்பு வந்தது, ஆர்வம் இல்லாததால் போகவில்லை.தமிழகம் போல் இலங்கையில் ஊடகத்தில் பெண்கள் அதிகம் இல்லை. அதனால், நான் ஊடக பெண்ணாக சாதித்து காட்ட வேண்டும் என முயற்சித்து கொண்டிருக்கிறேன்.இலங்கையை பொறுத்தவரை இந்தாண்டு தான் கொரோனா அதிகம் தாக்கியது. தற்போது ஊரடங்கு இங்கு இல்லை. கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. இதையெல்லாம் விட தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருந்துகளை தவறாமல் எடுக்கிறோம் என... கூறியபடி செய்திகள் வாசிக்க சென்றார் இனிக்கும் இலங்கை தமிழ் அழகி.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X