6.50 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி | ஈரோடு செய்திகள் | Dinamalar
6.50 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
15:50

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 6.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட துணை இயக்குனர் (சுகாதாரம்) சவுண்டம்மாள் கூறியதாவது: மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. தினமும், 10 ஆயிரம் பேருக்கு செய்யப்படுகிறது. மாவட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர், 17 லட்சம் பேர் உள்ளனர். அதில் இதுவரை, ஆறு லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தவிர தனியார் மருத்துவமனையில் மட்டும், 40 ஆயிரம் பேர் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். வீட்டைவிட்டு தேவையின்றி வெளியேறுவது, வெளியூர் செல்வதை தவிர்ப்பது, முக கவசம் அணிவதால் பாதிப்பை குறைக்கலாம். வெளி இடங்களுக்கு சென்று வருபவர்கள், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள மார்க்கெட், வணிக வளாகங்கள் சென்று வருபவர்களால்தான் புதிய பாதிப்பு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X