மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
16:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி முதல்வர் அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை ஆணைப்படி ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது. அதன்படி அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், சி.ஆர்.ஏ., கோர்ஸ் முடித்த, ஐந்து பேருக்கு நுண்கதிர் வீச்சாளராகவும், டையாலிசீயஸ் முடித்த, 10 பேருக்கு டையாலிசீயஸ் டெக்னீசியனாகவும், அதேபோல சி.டி., ஸ்கேன் டெக்னீசியன் ஐந்து பேருக்கும், மயக்கவியல் நிபுணர், 15 பேருக்கும், ஆய்வுக்கூட நுட்புனர் நிலை ஐஐக்கு ஐந்து பேருக்கும், டி.பார்ம்., முடித்த மருந்தாளுனர் ஐந்து பேருக்கும், தமிழில் எழுத படிக்க தெரிந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், 15 பேருக்கும் என மொத்தம், 65 பேருக்கு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டு முறைகளின்படி பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இது தற்காலிக பணிநியமனமாகும். பணி நியமனம் செய்யப்பட்டவர்கள ஆறு மாதங்களுக்கு பின் பணிநீக்கம் செய்யப்படுவர். விருப்பமுள்ள தகுதியான நபர்கள் விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளை முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலர் அரசு கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, காந்தி ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு வரும், 10க்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X