ஈரோட்டில் மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிப்பு; போலீஸ் ஸ்டேஷன் அருகில் சம்பவம் | ஈரோடு செய்திகள் | Dinamalar
ஈரோட்டில் மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிப்பு; போலீஸ் ஸ்டேஷன் அருகில் சம்பவம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
16:13

ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகே, மூதாட்டியிடம் போலீஸ் போல் நடித்து, 14 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.



ஈரோடு, நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சென்னியப்பன், 71; விவசாயியான இவர், உடல் நலக்குறைவால், ஈரோட்டில், முத்து கருப்பணன் வீதியில், ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற, மனைவி சரஸ்வதியுடன், 69, நேற்று காலை வந்தார். மருத்துவமனையில் ரத்த, சிறுநீர் மாதிரி கொடுத்த பின், இருவரும் சாப்பிட சென்றனர். சென்னியப்பன் சிறிது தூரம் முன் செல்ல, அவர் பின்னால் சரஸ்வதி சென்றார். அப்போது டூவீலரில் வந்த இருவர், போலீஸ் என கூறியுள்ளனர். 'காரில் எஸ்.பி., அமர்ந்துள்ளார்; வழிப்பறி நடக்கும் சூழலில், அதிக நகை போட்டிருக்க வேண்டாம். நகைகளை கழற்றி பைக்குள் வைத்து கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளனர். பின், காரில் இருப்பவர்களிடம் பேசி வந்தனர். இதையடுத்து வளையல், தாலிக்கொடி, தங்கச்சங்கிலி என, ?? பவுன் நகைகளை கழற்றி, தன் பைக்குள் வைக்க சரஸ்வதி முற்பட்டார். இருவரில் ஒரு ஆசாமி, பேப்பரில் வைத்து தருவதாக கூறி, பேப்பரில் மடித்து, அவரே பைக்குள் வைத்தார். அதன் பின் பைக், காரில் வந்தவர்கள் சென்றனர். சில நிமிடங்கள் கழித்து பைக்குள் இருந்த பொட்டலத்தை, சரஸ்வதி பிரித்து பார்த்தார். கல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஈரேடு அரசு மருத்துவமனை போலீசார், விசாரணை நடத்தினர். அப்பகுதி 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷன் அருகில், மர்ம ஆசாமிகள் மூதாட்டியிடம் நகை கொள்ளையடித்து சென்றது, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X