'பா.ஜ., தலைவர் அண்ணாமலை போராட்ட அறிவிப்பு நாடகம்' | கரூர் செய்திகள் | Dinamalar
'பா.ஜ., தலைவர் அண்ணாமலை போராட்ட அறிவிப்பு நாடகம்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
16:14

கரூர்: ''மேகதாது அணை கட்டக்கூடாது என, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் அறிவிப்பு நாடகத்தனமாக உள்ளது,'' என, தமிழ் பேரரசு கட்சி பொதுச்செயலாளரும், திரைப்பட இயக்குனருமான கவுதமன் கூறினார்.


கரூர் அருகே வெண்ணைமலையில் நடந்த பூசாரி பயிற்சி நிறைவு முகாமில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சத்திய பாமா அறக்கட்டளை சார்பில், 100 பேருக்கு, கரூரில் தமிழ் வழியில் பூசாரி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில், 50 பேர் தமிழ் வழியில், குடமுழுக்கு விழாவை நடத்தி வருகின்றனர். கடந்த, 2006 ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, 207 பேர் தமிழ் வழியில் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். அதில், இரண்டு பேர் மட்டுமே தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மீதமுள்ள, 205 பேருக்கும் கோவில்களில் நிரந்த அரசு பணி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாநில, மத்திய அரசு பணிகளில், 90 சதவீதம் தமிழர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். கர்நாடகாவில், மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. மத்தியிலும், கர்நாடகாவிலும், பா.ஜ., அரசே உள்ளது. இந்நிலையில், 'மேகதாது அணை கட்டக் கூடாது' என, தமிழக, பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு நாடகத்தனமாக உள்ளது. அந்த பேராட்டத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X