வன்னியர் உள்ஒதுக்கீடு சட்ட விரோதமானது: சீர்மரபினர் நலச்சங்க செயல் தலைவர் பேட்டி | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
வன்னியர் உள்ஒதுக்கீடு சட்ட விரோதமானது: சீர்மரபினர் நலச்சங்க செயல் தலைவர் பேட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
16:15

ஓசூர்: ''வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்ட விரோதமானது,'' என, சீர்மரபினர் நலச்சங்க செயல் தலைவர் ராமசாமி கூறினார்.


ஓசூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வன்னியர்களுக்கு மட்டும், 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை, அ.தி.மு.க., அரசு அறிவித்தது. தி.மு.க., அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. இது, புள்ளி விபர அடிப்படையில் சட்டவிரோதமானது. அவசர, அவசரமாக தேர்தலுக்காக உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது, 115 சமூகத்தினரின் உரிமைகளை பறிப்பதற்கு சமம். ஜாதி கணக்கெடுப்பு மூலம் தான் பிரச்னை தீர்க்க முடியும். கல்வி, வேலைவாய்ப்புகளில் உள்ஒதுக்கீடு என்பது, தொகுப்பு வாரி ஜாதி உள் ஒதுக்கீடாக தான் இருக்க வேண்டும். ஆனால், ஒரு சமுதாயத்துக்கு மட்டும் தனியாக உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது தவறாகும். இவ்வாறு, அவர் கூறினார். பேட்டியின்போது, குலாலர் சமுக தலைவர் சீனிவாசன், வேட்டுவகவுண்டர் பேரவை செயலாளர் கருணாகரன், அனைத்து மறவர் கூட்டமைப்பு செயலாளர் மாரிமுத்து உடனிருந்தனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X