முட்டை நுகர்வு சரிவு: கொள்முதல் விலை குறைப்பு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
முட்டை நுகர்வு சரிவு: கொள்முதல் விலை குறைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
16:17

நாமக்கல்: வடமாநிலங்களில், 'ஸ்ராவன்' விரதம் கடைப்பிடிப்பால் நுகர்வு சரிந்துள்ளது. அதனால், முட்டை கொள்முதல் விலை, ஐந்து நாட்களில், 55 காசு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த, 1ல், 490 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை, 9ல், 480; 15ல் 495; 17ல், 505; 19ல், 515 என, படிப் படியாக உயர்ந்தது. தொடர்ந்து, 26ல், 15; 29ல், 20 காசு என, இரண்டு நாட்களில், 35 காசு குறைக்கப்பட்டது. நேற்று, மேலும், 20 காசு சரிந்து, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து நாட்களில், முட்டை கொள்முதல் விலை, 55 காசு குறைந்துள்ளது.


தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணை தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: ஆண்டு தோறும், ஆடி மாதம், 18 வரை முட்டை விலை குறையும். மேலும், வடமாநிலங்களான மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஸ்ராவன் விரதம் கடைப்பிடிக்கின்றனர். வரும், 6 முதல், கர்நாடகா, ஆந்திராவில், ஸ்ராவன் விரதம் துவங்குகிறது. அதையடுத்து, வடமாநிலங்களில் நுகர்வு சரிந்துள்ளதால் முட்டைகள் அனுப்புவது நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, நான்கு நாட்களில், இரண்டு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தமிழகத்தில், ஆடி, 18 க்கு பின், நிலைமை சீராகி, நுகர்வு அதிகரிப்பதுடன், கொள்முதல் விலையும் உயர்த்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X