பரமக்குடியில் செயின் பறிப்பு சி.சி.டி.வி., காட்சிகள் சிக்கின | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடியில் செயின் பறிப்பு சி.சி.டி.வி., காட்சிகள் சிக்கின
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
22:17

பரமக்குடி : பரமக்குடியில் செயின், அலைபேசி பறிப்பில் ஈடுபட்டு வரும் டூவீலர் இளைஞர்கள் சி.சி.டி.வி., யில் சிக்கினர்.



பரமக்குடி காளிதாஸ் ஸ்கூல் தெருவில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் மாலை 5:15 மணிக்கு பெருமாள் கோயில் தெரு சந்திப்பு, கிரிஅம்பலம் நாராயணன் தெருவில் நம்பர் பிளேட் இல்லாத புதிய டூவீலரில் இரண்டு இளைஞர்கள் வந்துஉள்ளனர்.அதே தெருவைச் சேர்ந்த பலகாரக்கடை நடத்தி வரும் கமலம், 55, வீட்டிலிருந்து கடைக்கு நடந்து சென்றுள்ளார். டூவீலரை ஓட்டிய படி வந்த இளைஞர் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்து கீழே தள்ளினார். கூச்சலிடவே தங்க சங்கிலி பெண்ணின் கழுத்திலேயே அறுபட்ட நிலையில் மீட்கப்பட்டது. அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளின் படி இளைஞர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X