குடும்பத்திற்கு 5 குடம் தண்ணீர் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
குடும்பத்திற்கு 5 குடம் தண்ணீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
22:59

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கடந்த சில மாதங்களாக காவிரி தண்ணீர் வராததால் ஊராட்சி சார்பில் குடும்பத்திற்கு 5 குடம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.



இளஞ்செம்பூர், பூக்குளம்,கோகுல்நகர், இந்திரா காலனி, வீரம்பல் உள்ளிட்ட கிராமங்களில் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு தண்ணீர் வழங்குவதற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு காவிரி தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.கடந்த சில மாதங்களாக காவிரி தண்ணீர் முறையாக வராததால் கிராம மக்கள் தண்ணீருக்காக சிரமப்பட்டு வந்தனர்.ஊராட்சி சார்பில் தற்காலிகமாக டேங்கரில் தண்ணீர் கொண்டு வந்து குடும்பத்திற்கு 5 குடம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.




அத்தியாவசியதேவைக்கு போர்வெல் தண்ணீர் வழங்கப்படுகிறது. கூடுதல் பயன்பாட்டிற்காக டிராக்டர் தண்ணீரை ரூ.10 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X