'ஷாக்' கொடுக்கும் மின் கட்டணம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
23:01

தொண்டி, : தொண்டியில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தியதால் மின் கட்டணம் அதிகரிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.


தொண்டி மின்வாரியம்சார்பில் டிஜிட்டல் மின் மீட்டர் பொருத்தப்பட்டது. சில மாதங்களாக மின்கட்டணம் வழக்கத்தை விட அதிகம் வருவதாக புகார் எழுந்துள்ளது.தொண்டி புதுக்குடியை சேர்ந்த சின்னத்தம்பி கூறியதாவது:எனது வீட்டு (மின் இணைப்பு எண்: 1120) ரூ.155 கட்டணமாக இருந்தது. டிஜிட்டல் மீட்டர் பொருத்திய பின் ரூ.1110 கூடுதலாக அதிகரித்துள்ளது, என்றார். மீனவர் காலனி செங்கைராணி கூறியதாவது:எனது வீட்டு கட்டணம் (மின் இணைப்பு எண்: 865) ரூ.260 ஆக இருந்தது.தற்போது ரூ.1304 வந்துஉள்ளது என்றார்.



இதே போல் பல்வேறு வீடுகளில் பல மடங்கு அதிகரித்து உள்ளதால் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.அவர்கள் கூறியதாவது:மைக்ரோ டிஜிட்டல் மின் மீட்டரில் ரீடிங் எடுப்பவர் பயிற்சி பெற்றவராக தெரியவில்லை. அவர்கள் கணக்கிடும் தொகையை செலுத்தியாக வேண்டும் என வற்புறுத்துகின்றனர். இது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம் என்றனர். தொண்டி மின்வாரியஅலுவலர்கள் கூறியதாவது:டிஜிட்டல் மின் மீட்டர் மின் பயனீட்டு கணக்கை துல்லியமாக கணிக்கும். மின் குறை இருப்பவர்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்தால் சரி செய்து தரப்படும் என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X