மிதவை கூண்டில் ரூ.10 கோடி கடல் விரால் மீன் ஏற்றுமதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2021
23:01

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மிதவை கூண்டு விரால் மீன் வளர்ப்பு திட்டத்தில் ரூ.10 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் தெரிவித்தார்.



அவர் கூறியதாவது:ஹைதராபாத் தேசிய மீன் அபிவிருத்தி வாரியம் சார்பில் மண்டபம், மரைக்காயர்பட்டினம், முனைக்காடு, நாலுபனை, குந்துகால், சின்னப்பாலம், தங்கச்சிமடம் பகுதிகளில் 60 மிதவை கூண்டுகள் அமைத்து கடல் விரால்(கோபியா) வளர்ப்பில் மீனவர்கள், மீனவ பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு முதல் பிரதமர் மீன்வள மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் மகளிர் , எஸ்.சி., எஸ்.டி.,யினருக்கு 60 சதவீத மானியத்திலும், ஆண்களுக்கு 40 சதவீத மானியத்திலும் மிதவை கூண்டுகள் அமைத்து தரப்படுகிறது.கூண்டு அமைக்க ரூ.5 லட்சம் செலவிடப்பட்டால் அதில் ரூ.3 லட்சம் மானியமாக கிடைக்கும்.



மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி அளிப்பது, தொழில் நுட்ப உதவிகள், விற்பனை சந்தை வசதி ஏற்படுத்தல், மீன் குஞ்சுகள் வழங்குவதை நாங்கள் செய்கிறோம்.நடப்பு ஆண்டில் தமிழக கடலோர மாவட்டங்களுக்கு 150 மிதவை கூண்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 10 கூண்டுகள் வர உள்ளன. ஒரு கூண்டில் 1000 கடல் விரால் குஞ்சுகள் வளர்க்கலாம். ஏழு மாதங்களில் குறைந்தது 3 கிலோ எடை வளரும். ஒரு கூண்டில் குறைந்தது இரண்டரை டன் மீன் உற்பத்தி கிடைக்கும்.





ஏழு மாதங்களுக்கு ஒருமுறை செலவு போக ஒவ்வொரு கூண்டிலும் தலா ரூ.2.50 லட்சம் லாபம் கிடைக்கும். அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் 150 டன்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் மூலம் ரூ.10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, என்றார்.நாடு முழுவதும் 4000 மிதவை கூண்டுகள் மூலம் 10 ஆயிரம் டன் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது ரூ.700 கோடிக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கிறது. பல மாநிலங்களில் மிதவை கூண்டில் கொடுவா, சிங்கி இறால் வளர்க்கப்படுகிறது, என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X