சில வரி செய்திகள்; காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
சில வரி செய்திகள்; காஞ்சிபுரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
00:19

குடிநீர் கேட்டு சாலை மறியல்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது மடம் தெருவில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டியபோது குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதனால், அங்கு, ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை.குடிநீர் கிடைக்காததால், மேற்கண்ட தெருவைச் சேர்ந்த, 50 பேர் காலி குடங்களுடன், ஓ.எம்.ஆர்., சாலையில், மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் மக்களிடம் பேச்சு நடத்தி, குழாய் உடைப்பு உடனே சரி செய்து தருவதாகவும், தற்காலிகமாக லாரி மூலம் தண்ணீர் சப்ளை செய்வதாகவும் கூறியதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.



அதிகாரி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக, ஸ்ரீதேவி, பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக, ஜெயசுதா பதவி வகித்து வந்தார். அவர், சென்னை மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேம்பாட்டு நிறுவனத்திற்கு, இணை இயக்குனராக பணி மாறுதலில் சென்றார். அவருக்கு பதிலாக, சென்னை நீர் வடி பகுதி மேம்பாட்டு முகமை இணை இயக்குனராக இருந்த ஸ்ரீதேவி என்பவர், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனராக, பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.


 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X