வீட்டிலிருந்து வெளியில் செல்லும் முன் உங்களை நீங்களே கேட்டுப்பாருங்கள்! இது தேவையா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

02 ஆக
2021
01:51
பதிவு செய்த நாள்
ஆக 02,2021 01:24

கோவை:கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும், 'இது மிகவும் அவசியம் தானா' என்று எண்ணிப் பார்த்து, செல்வது நல்லது.உயிரிழந்த உறவுகளின் நினைவுகள் ஒரு புறம்; உயிர் பிழைத்தாலும், சிக்கி சீரழிந்து போன குடும்பங்களின் பரிதாப நிலை இன்னொருபுறம் என, கொரோனா இரண்டாம் அலை, கோவை மாவட்டத்தில் அனைத்து தரப்பினரையும் பாடாய்படுத்தி விட்டது.



'பாதிப்பு குறைய தொடங்கி இருக்கிறது' என்று சற்றே, அனைவரும் நிம்மதி அடையத் தொடங்கிய நேரத்தில், மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது.இரண்டாம் அலையில், அதிக பாதிப்புகளை சந்தித்த மாவட்டம் கோவை என்பதால், அரசும் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது.அதனால், தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும், விதித்த பொதுவான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன், கோவைக்கு கூடுதலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.



அதன்படி பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்பட முடியும்.கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, காந்திபுரம் 5, 6, 7ம் வீதிகள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி ரோடு, சாரமேடு ரோடு ராயல் நகர் சந்திப்பு, ரைஸ் மில் ரோடு, என்.பி.இட்டேரி ரோடு, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலுார் சந்திப்பு ஆகிய இடங்களில் செயல்படும் கடைகள், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


அனைத்து உணவகங்களும் காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை, 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை, பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி தரப்படும்.மொத்த விற்பனை மார்க்கெட்டுகள் மட்டுமே செயல்படலாம். சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீதம் கடைகள் சுழற்சி முறையில் இயங்க, அனுமதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த நடைமுறைகளை முழுமையாக பின்பற்றவும், முடிந்தால் அதைக்காட்டிலும் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை பின்பற்றவும், பொதுமக்களும், வணிகர்களும் முன் வர வேண்டும்.


வீட்டை விட்டு வெளியில் செல்லும் ஒவ்வொருவரும், 'இப்போது வெளியில் செல்வது அவசியம் தானா' என்று ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து, அவசியம் என்று கருதினால் மட்டுமே, வெளியில் செல்ல வேண்டும்.தடுப்பூசி போடச் செல்வது, தவிர்க்க இயலாத நிலையில் வெளியில் செல்லும்போது, இரட்டை மாஸ்க், சானிட்டைசர் ஆகியவற்றுடன் செல்வதும், வீடு திரும்பியதும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X