சில வரி செய்திகள்: சென்னை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
02:34

விபத்தில் மாணவர் பலி


கும்மிடிப்பூண்டி: ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்தவர் வசந்தகுமார் 19; கல்லுாரி மாணவர். அதே பகுதியை சேர்ந்தவர் நண்பர் விக்னேஷ் 23. இருவரும் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு பைக்கில் சென்றனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சின்ன ஓபுளாபுரம் கிராமம் அருகே, சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த இருவரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வசந்தகுமார் இறந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.



செயின் பறிக்க முயன்றோருக்கு வலை



பூந்தமல்லி: பூந்தமல்லி, கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் சரண்யா. வீட்டின் அருகே உள்ள, கடைக்கு நடந்து சென்றபோது, டூ வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவரது 4 சவரன் செயினை பறிக்க முயன்றனர். அதை சரண்யா தடுத்தார். செயினை பறிக்க முடியாததால், மர்மநபர்கள் ஆத்திரத்தில் அவரை, கீழே தள்ளி தப்பினர். இது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.




14 கிலோ கஞ்சா பறிமுதல்


சூளைமேடு: சூளைமேடு, அண்ணா நெடும்பாதை - பெரியார் பாதை சந்திப்பு அருகே, சூளைமேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூ வீலரில் வந்த நபரை சோதனை செய்ததில், 2 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 25, என தெரிய வந்தது. தொடர் விசாரணையில், கொட்டூரைச் சேர்ந்த பிரகாஷ், 38, அவரது மனைவி வாணி, 34, ஆகியோரிடம் கஞ்சா வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கொரட்டூர் சென்ற போலீசார், வாணியை கைது செய்ததுடன், 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பிரகாஷை தேடி வருகின்றனர்.

* மாதவரம் பால்பண்ணை போலீசார், மாத்துார் ஏரிக்கரை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெரியமாத்துார், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தமிழ்செல்வன், 26, என்பவர், இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் நடத்திய சோதனையில், 1.5 கிலோ கஞ்சா சிக்கியது. அவரை கைது செய்த போலீசார், வாகனத்தை பறிமுதல் செய்தனர்.




சூதாடிய 19 பேர் கைது


ராயப்பேட்டை: ராயப்பேட்டை, கந்தசாமி லேனில் உள்ள வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ராயப்பேட்டை போலீசார், சூதாட்டத்தில் ஈடுபட்ட வீட்டு உரிமையாளர் கண்ணியப்பன், 58, ராயப்பேட்டையைச் சேர்ந்த சிலம்பரசன் 31, வேணு 51, உட்பட, 19 பேரை கைது செய்தனர். 28 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.





4 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு


அண்ணா நகர்: அண்ணா நகர், 4வது அவென்யூவில் உள்ள ஒரு பகுதியில் அனுமதியின்றி மசாஜ் சென்டர் நடப்பதாக அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் சோதனையில், அந்த வீட்டில் அனுமதி இல்லாமல் 'மசாஜ் சென்டர்' நடத்தி வந்தது தெரியவந்தது. அங்கிருந்த நான்கு பெண்களை மீட்ட போலீசார், 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். மீட்கப்பட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.



கோவில் கலசம் திருட்டு


அம்பத்துார்: அம்பத்துார் அடுத்த அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், டி.வி.எஸ்., அவென்யூவில், சிவா - விஷ்ணு கோவில் உள்ளது. இங்கு, தங்க முலாம் பூசப்பட்ட இரண்டு பஞ்சலோக கலசம் திருடு போனது. இது குறித்து, ஜெ.ஜெ. நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.




கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்


குன்றத்துார்: கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார துவக்க விழா, குன்றத்துார் பஸ் நிலையத்தில் நடந்தது. இதில், ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.



டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் மண்டலத்தில் நடந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில், திறந்தவெளியில் மழை நீர் தேங்கும் வகையில் கிடக்கும் பொருட்களை அப்புறப்படுத்துவது, வீட்டை சுற்றி சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக, பொதுமக்கள் மத்தியில், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. அனைவருக்கும், கபசுர குடிநீர், விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.





பஸ் மோதி ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு


பள்ளிக்கரணை: திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ரமேஷ், 35; ஐ.டி., ஊழியர். இருசக்கர வாகனத்தில், பெரும்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி புறப்பட்டார். மேடவாக்கம் அருகில் சென்றபோது, தாம்பரத்தில் இருந்து, திருவான்மியூர் நோக்கி சென்ற மாநகர பேருந்து மோதி, ரமேஷ் உயிரிழந்தார். விபத்து ஏற்படுத்திய பஸ் ஓட்டுனர் தர்மன், 50, கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X