மது, குட்கா விற்பனை: தி.மு.க., நிர்வாகி கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
02:48

அம்பத்துார்: அம்பத்துார் அருகே கள்ளச்சந்தையில், குட்கா, மதுபாட்டில்களை விற்பனை செய்த தி.மு.க., நிர்வாகி கைது செய்யப்பட்டார்.


அம்பத்துார் அடுத்த பட்டரவாக்கம், பிராமின் தெருவைச் சேர்ந்தவர் பரிமளம் 50. இவர், 84வது வட்ட தி.மு.க., இணை செயலராக உள்ளார். கட்சி பணி தொடர்பாக, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.


கடந்த மூன்று மாதத்திற்கு முன், வீட்டருகே மளிகை கடை வைத்தவர், குட்கா மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி விற்றார். தகவல் அறிந்த அம்பத்துார் தனிப்படை போலீசார், அவரது கடையில் சோதனையிட்டு, 60 கிலோ குட்கா மற்றும் 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.


அரசுக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும் வகையில், தி.மு.க., நிர்வாகியே, குட்கா மற்றும் மதுவை பதுக்கி வைத்து விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
02-ஆக-202123:01:18 IST Report Abuse
Raj சட்ட சபையில் விற்க சென்றவர்கள்தான் ஆச்சிரியம் இல்லை
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
02-ஆக-202105:45:17 IST Report Abuse
oce நாட்டை பிடிப்பதே மூடர்களையும் முட்டாள்களையும் தன் பக்கம் வைத்திருக்கத்தான். தூண்டி விட்டு தூண்டப்பட்ட வன் மாட்டும் போது ஒன்றும் தெரியாதது போல் இருப்பது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-ஆக-202105:19:32 IST Report Abuse
Mani . V ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X