கட்டுமான பொருட்களின் விலை படிப்படியாக குறைகிறது! வீடு கட்டும் பணி அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
05:46

தமிழகத்தில் கொரோனா தொற்று முதல் அலையை விட, இரண்டாவது அலை வேகமாக பரவியது. இரண்டாவது அலையில் இறப்புசதவீதம் அதிகரித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் கடலுார் மாவட்டத்தில் கட்டுமான பணி இடைவிடாமல் நடந்தது.



இப்பணியில் சமூக இடைவெளி கிடைப்பதால் அரசு தடை விதிக்கவில்லை.கடலுார் பின் தங்கிய மாவட்டம் என்பதால் பசுமை வீடு, தானே, குடிசை மாற்று வாரியம் சார்பில் கான்கிரீட் வீடு, பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்ற பல திட்டங்கள் வாயிலாக வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிகளவில் கான்கிரீட் வீடுகள் கட்டி வருகின்றனர்.



முழு ஊரடங்கு அமலில் இருந்த போது, கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.இந்த விலை உயர்வை பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணமாக கூறி வியாபாரிகள் நியாயப்படுத்தினர். கொரோனா பரவலுக்கு முன்பு இரும்பு கம்பியின் விலை கிலோ ரூ. 62 இருந்தது. இதன் விலை கடந்த ஒரு மாதம் முன்பு வரை ரூ. 72 ஆனது. ஒரு மூட்டை ரூ. 340 ஆக இருந்த சிமெண்ட் ரூ. 500 ஆனது. கட்டட தொழிலுக்கு பயன்படும் எம்.சாண்ட் ஒரு லோடு ரூ. 20 ஆயிரமாக உயர்ந்தது.



ஒரு லோடு செங்கல் ரூ. 28 ஆயிரமாகவும், அதற்கேற்ப கொத்தனார் கூலியும் அதிகரித்தது. தமிழகத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.தென் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சிமெண்ட், கம்பியின் விலை உயர்ந்துள்ளது என எதிர்கட்சியினர் குரல் எழுப்பினர். இதையடுத்து சிமெண்ட் கம்பெனி உரிமையாளர்களை தமிழக முதல்வர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்,சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ. 25 உடனடியாக குறைக்கப்பட்டது.



தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் கட்டுமான பொருட்களும் குறையத் துவங்கின. கம்பியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 62ஆனது. சிமெண்ட் ரூ. 500லிருந்து ரூ 400 மற்றும் ரூ. 410 ஆக குறைந்துள்ளது. எம்.சாண்ட் ஒரு லோடு ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 16ஆயிரமாக குறைந்துள்ளது. செங்கல் விலை மற்றும் கட்டட தொழிலாளர்கள் கூலியும் அதே நிலையில் நீடித்து வருகிறது.



கொேரானா பரவல் குறைந்துள்ளதால் நடுத்தர வர்க்கத்தினர் மீண்டும் வீடு கட்டும் பணியை துவக்கியுள்ளனர். இதே வேகத்தில் கட்டுமானபொருட்களின் விலை குறையுமானால் வீடு கட்டும் கனவில் உள்ள சாமானியர்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஆக-202119:41:09 IST Report Abuse
அப்புசாமி எல்லோருக்கும் வூடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X