கொரோனா தடுப்பு விதிமீறல்; ரூ. 97 லட்சம் அபராதம் வசூல்  | கடலூர் செய்திகள் | Dinamalar
கொரோனா தடுப்பு விதிமீறல்; ரூ. 97 லட்சம் அபராதம் வசூல் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
05:55

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 47 ஆயிரத்து 993 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.



கடலுார் மாவட்டத்தில், கடலுார், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்டஏழு காவல் உட்கோட்டங்கள் உள்ளன. மாவட்டத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது உட்கோட்டபோலீசார் வழக்குப் பதிந்து அபராதம் வசூலித்து வருகின்றனர். கடந்த ஜூன் 14ம் தேதி முதல், நேற்று முன்தினம்வரை முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 47 ஆயிரத்து 545 பேர் மீதும், சமூக இடைவெளியை பின்பற்றாத 448 பேர் உட்பட 47 ஆயிரத்து 993 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ. 97 லட்சத்து 33 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X