சேதமடைந்த தளவானுார் அணைக்கட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
06:20

விழுப்புரம் - கடலுார் மாவட்டத்திற்கு இடையே, தளவானுார் - எனதிரிமங்கலம் அணைக்கட்டு சேதமடைந்ததை சீரமைக்க, ரூ.15 கோடி நிதி கேட்டு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் அரசுக்கு கோப்பு அனுப்பி உள்ளனர்.



விழுப்புரம் மாவட்டம் தளவானுார் - கடலுார் மாவட்டம் எனதிரிமங்கலம் இடையே, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, 2019ம் ஆண்டு புதிதாக அணைக்கட்டு கட்டப்பட்டது. இதில், ரூ. 25.35 கோடி மதிப்பில், 376.60 மீ., நீளத்திற்கு அணைக்கட்டு, 800 மீ., நீளத்திற்கு வெள்ள தடுப்புக் கரை அமைக்கப்பட்டது.இரு மாவட்டங்களுக்கும் தலா 3 ஷட்டர்கள் அமைக்கப் பட்டன. தரை பகுதிக்கு மேல் 10 அடி 4 அங்குலம் உயரத்திற்கு கான்கிரீட் கரை அமைக்கப்பட்டது. பருவ மழை காரணமாக, இந்த அணைக்கட்டில், 67 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்கப்பட்டது.



கடந்த ஜனவரி 22ம் தேதி, அணைக்கட்டின் எனதிரிமங்கலம் ஆற்றின் கரையோரம் இணைப்புச் சுவர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இதனால் அணைக்கட்டில் ஒரு ஷட்டர் உடைந்து சேதமானது.சேதமான ஷட்டரை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கி உள்ளதாக, அப்போதைய சட்டத் துறை அமைச்சர் சண்முகம் கூறினார். அணைக்கட்டு கட்டியதில் ஊழல் நடந்ததால் உடைப்பு ஏற்பட்டதாக, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.



இந்நிலையில், அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை புதிதாக கட்டித் தர வேண்டும். இல்லா விட்டால், அதற்கான செலவு தொகையை செலுத்த வேண்டும் என, பணியை மேற்கொண்ட கன்ஸ்ட்ரக் ஷன்ஸ் நிறுவனத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், உடைப்பு ஏற்பட்ட எனதிரிமங்கலம் ஆற்றின் கரை வரையும், தளவானுார் ஆற்றின் கரை வரையிலும் கான்கிரீட் சுவர் புதியதாக அமைக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



இதற்காக, 15 கோடி ரூபாய் நிதி கேட்டு, கடந்த மே மாதம் அரசுக்கு கோப்பு அனுப்பி உள்ளனர்.நிதி கொடுத்தால், எனதிரிமங்கலம் பகுதியில் உடைந்த ஷட்டர் மற்றும் மீதமுள்ள இரு ஷட்டர்களை அகற்றி, புதிதாக மூன்று ஷட்டர்கள் அமைக்கப்படும். ஆற்றின் கரையோரம் கான்கிரீட் தடுப்புச் சுவரும் அமைக்கப்பட உள்ளது.மழைக்காலம் துவங்குவதற்குள், நிதி ஒதுக்கி பணியை துவக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X