கணவரை அடித்து கொன்ற அரசு பள்ளி ஆசிரியை; கள்ளக்காதல் விவகாரம் என உறவினர்கள் சாலை மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
09:59

வாழப்பாடி: வாழப்பாடி அருகே குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை நேற்று (ஆக.,01) மாலை உருட்டு கட்டையால் அடித்து அரசு பள்ளி ஆசிரியை கொலை செய்தார். இந்நிலையில் அவர் கள்ளக்காதல் தொடர்பால் தீர்த்துக் கட்டியதாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப்பள்ளி வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத்தொழிலாளி சித்தன் மகன் மணிகண்டன், 35. இவர், 11 ஆண்டுகளுக்கு முன் பேளூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை இளமதி, 30 என்பவரை காதலித்து, கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 10 வயதில் ஒரு ஆண்குழந்தையும், 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.



சென்னையில் அரசு பூம்புகார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மணிகண்டன், பணி நீக்கம் செய்யப்பட்டதால் குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு சென்று மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் சென்ற மணிகண்டன், வழக்கம்போல மனைவி இளமதியிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆசிரியை இளமதி, தனது கணவர் மணிகண்டனை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரது மனைவியான அரசுப்பள்ளி ஆசிரியை இளமதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரை அரசுப்பள்ளி ஆசிரியை கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில் இன்று காலை மணிகண்டனின் உறவினர்கள், இளமதி கள்ளக்காதல் தொடர்பால் இவரை தீர்த்துக்கட்டி உள்ளதாக வாழப்பாடி - பேளூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
05-ஆக-202116:41:30 IST Report Abuse
Bhaskaran ஜாக்டோ ஜியோ தலையிட்டு அரசு ஆசிரியைக்கு நியாயம் கிடைக்க போராடும்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
04-ஆக-202115:37:11 IST Report Abuse
raja காதல்... பின் கள்ள காதல்.... விளங்கிடும் விடியல் தமிழகம்....
Rate this:
Cancel
g.kumaresan - Chennai,இந்தியா
04-ஆக-202111:03:18 IST Report Abuse
g.kumaresan பெற்றோரை மதிக்காமல் காதல் என்று கல்யாணம் செய்தல் எப்படி ஒரு விளைவை கொடுக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X